போந்தூர் ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையில் இந்த ஏரி உடைந்து தண்ணீர் முற்றிலும் வீணானது.

Update: 2019-05-18 22:45 GMT
அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் போந்தூர் ஏரி 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. 4 மதகுகளில் 3 மதகுகள் பழுதடைந்து காணப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையில் இந்த ஏரி உடைந்து தண்ணீர் முற்றிலும் வீணானது.

புதர் மண்டி கிடக்கும் இந்த ஏரியை தூர்வாரி மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்