இலுப்பூர், திருமயம் பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேரோட்டம்
இலுப்பூர், திருமயத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதைதொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் திருதேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியும், மாலை கருட சேவையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், மண்டகப்படிதாரர்கள், ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இலுப்பூர் போலீசார் செய்திருந்தனர்.
சத்தியமூர்த்தி பெருமாள் கோவில்
திருமயத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து பெருமாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தினமும் காலை, மாலை வேளைகளில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார்.
கோவிந்தா... கோவிந்தா...
அதை தொடர்ந்து மேள தாளம், வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். தேரை பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்து கோவில் நிலையை வந்தடைந்தனர். பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து புஷ்ப ஊரணியில் பெருமாளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.