முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
நெல்லையில் முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை,
தமிழ் கடவுளாகிய முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். இதனால் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வைகாசி விசாகத்தில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அத்தகைய வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று வைகாசி விசாகத்தன்று சுப்பிரமணியருக்கு தங்க கவசம் சாத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
காலை 10 மணிக்கு கும்ப பூஜையும், ஹோமம் வளர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் வீதி உலா நடந்தது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நெல்லை சந்திப்பில் உள்ள பாளையஞ்சாலைகுமாரசாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு விசுவரூபதரிசனம் நடந்தது. காலை 5-30 மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு ருத்ரஏகாதசி ஹோமமும், சடாச்சரஹோமமும் செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும் எடுத்து வரப்பட்டது. பகல் 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் சண்முகா அர்ச்சனையும், சுவாமி சப்பர வீதி உலாவும் நடந்தது.
நெல்லையப்பர் கோவில் ஆறுமுகர் சன்னதி, பாளையங்கோட்டை சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடந்தது.