கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு

கமல்ஹாசன் பிரசாரத்துக்கு தடைவிதிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.

Update: 2019-05-16 23:07 GMT
மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் நேற்று நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் சரவணன், நீதிபதிகள் முன்பு ஆஜராகி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார். அவரது பேச்சால் மக்களிடையே பிளவு ஏற்பட்டு, பிரச்சினைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே அவர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இதுதொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகளிடம் முறையிட்டார். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததுடன், இதுபற்றி தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. எனவே இந்த பிரச்சினையில் கோர்ட்டு தலையிட முடியாது. இந்த கோரிக்கை தொடர்பான வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க இயலாது என்று கூறி மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்