முட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

லாரி சத்தியமங்கலம் நெடுஞ்சேரி கண்மாய் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2019-05-15 22:45 GMT
அன்னவாசல்,

நாமக்கல்லில் இருந்து புதுக்கோட்டைக்கு முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரி சத்தியமங்கலம் நெடுஞ்சேரி கண்மாய் அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில் லாரியில் இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சரி செய்தனர். 

மேலும் செய்திகள்