‘முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்ைல என சொல்வதற்கு நான் சன்னியாசி அல்ல’ நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்லை என சொல்வதற்கு நான் சன்னியாசி அல்ல என்று நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.;

Update:2019-05-15 03:14 IST
பெங்களூரு,

நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் சன்னியாசி அல்ல

முதல்-மந்திரி பதவி மீது ஆசை இல்லை என்று சொல்வதற்கு நான் சன்னியாசி அல்ல. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வேன். அதன் முடிவை இறைவன் பார்த்துக்கொள்வார். கடந்த ஆண்டு என்னுடைய பிறந்தநாளன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது.

இந்த ஆண்டு எனது நண்பரின் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆதரவாளர்கள் யாரும் என்னை தேடி வர வேண்டாம். நாளை (அதாவது இன்று) நான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட முடிவு செய்துள்ளேன்.

எந்த பிரச்சினையும் ஏற்படாது

பா.ஜனதாவினர் என்னை இலக்காக வைத்து செயல்படுகிறார்கள். அவர்கள் தங்களின் வேலையை செய்கிறார்கள். இதை தவறு என்று நான் சொல்லமாட்டேன். மாங்காய் பழமானால் மட்டுமே, அதை கல்லால் அடித்து விழவைக்க முடியும்.

சித்தராமையா பற்றி எச்.விஸ்வநாத் கூறிய கருத்தால், கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. ராகுல் காந்தியின் வழிகாட்டுதல்படி நானும், சித்தராமையாவும் செயல்படுகிறோம். மீண்டும் முதல்-மந்திரியாவேன் என்று எடியூரப்பா சொல்கிறார். அதுபோல் ஒன்றும் நடைபெறாது.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

மேலும் செய்திகள்