காங்.-ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் விரிசல் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு ஆட்சி நீடிக்குமா?
சித்தராமையா மற்றும் எச்.விஸ்வநாத் இடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரத்தால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணியில் விரிசல் அதிகமாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த ஆட்சி நீடிக்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்ட சபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
இதில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு பேசினர். குறிப்பாக காங்கிரசின் எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ., தேவேகவுடா குடும்பத்தினரை பற்றி கடும் விமர்சனம் செய்தார்.
இதனால் கடும் கோபம் அடைந்த முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு பேசுவது தொடர்ந்தால், பதவியைவிட்டு விலகுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சினையை தீர்த்து வைத்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர், சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், ஜனதா தளம்(எஸ்) மாநில தலைவர் எச்.விஸ்வநாத், “சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, எந்த சாதனையும் புரியவில்லை. அவர் நல்ல திட்டங்களை அமல்படுத்தி இருந்தால், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஏன் தோற்றது?. அவரது ஆட்சி காலத்தில் சிறப்பான திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை. தேவராஜ் அர்ஸ் ஆட்சி நிர்வாகத்தைவிட சித்தராமையாவின் ஆட்சி சிறந்ததாக இருந்ததா?. 30 ஆண்டுகளுக்கு பிறகும் தேவராஜ் அர்ஸ் ஆட்சி காலத்தை மக்கள் நினைத்து பார்க்கிறார்கள். அத்தகைய நினைவுகூரத்தக்க திட்டங்களை சித்தராமையா நிறைவேற்றினாரா?” என்று கூறினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சித்தராமையா, எச்.விஸ்வநாத்தை விமர்சித்துள்ளார். பொறாமை குணம் கொண்டவர், தனது ஆட்சி பற்றி இவ்வாறு குறை கூறுகிறார். அவரது இந்த பேச்சு பற்றி கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரச்சினை கிளப்புவேன் என்று சித்தராமையா கூறியிருக்கிறார்.
சித்தராமையாவின் இந்த கருத்துக்கு எச்.விஸ்வநாத் பதில் அளித்துள்ளார். பெங்களூருவில் நேற்று அவர் கூறியதாவது:-
கூட்டணி தர்மத்தை காப்பாற்றவே ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு சித்தராமையா தான் தலைவர். முதல்-மந்திரியாக விரும்புகிறேன் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சொல்ல உங்களை யார் தடுத்தது.
ஓராண்டு ஆகியும், ஒருங்கிணைப்பு குழு, பொது செயல் திட்டத்தை உருவாக்கவில்லை. அதற்கு அவர் தயாராக இல்லை. அதை விடுத்து என்னை பொறுப்பற்றவன் என்று குறை சொல்வது சரியல்ல. கூட்டணி அரசு எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்யவில்லை.
என்ன திட்டங்களை அமல்படுத்த வேண்டும், எந்த கொள்கையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட வேண்டும் என்பதையும் முடிவு செய்யவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால், 2022-ம் ஆண்டு தான் சித்தராமையா முதல்-மந்திரியாக முடியும். அதற்கு முன்பு கிடையாது.
இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, “சித்தராமையா பற்றி எச்.விஸ்வநாத் கூறியது அவரது சொந்த கருத்து கிடையாது. அது குமாரசாமியின் கருத்தாகும். காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணியில் சுமுக நிலை இல்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தபோதிலும், அடிமட்ட அளவில் தொண்டர்களிடையே கசப்பான நிலை இன்னமும் நீடிக்கிறது” என்றார்.
மோதல் பற்றி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறுகையில், “சித்தராமையா மற்றும் எச்.விஸ்வநாத் இடையே ஏற்பட்டுள்ள தனிப்பட்ட கருத்து வேறுபாடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகிறது. இந்த சூழ்நிலையில் சித்தராமையாவை எச்.விஸ்வநாத் விமர்சித்து பேசி இருப்பது சரியல்ல. இதுபோன்ற கருத்துக்களை வரும் நாட்களில் பேசக்கூடாது. நாங்களும் அவ்வாறு பேசக்கூடாது. இது தான் கூட்டணி தர்மம்” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் எச்.விஸ்வநாத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால், காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் விரிசல் அதிகமாகியுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா, துமகூரு, ஹாசன், மைசூரு-குடகு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளில் கூட்டணி வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டால், கூட்டணி ஆட்சியில் நிலவும் மோதல் போக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.