காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தல்
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
திருவாரூர்,
திருவாரூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேதாரண்யம் பகுதி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். குடந்தை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஜெயபாண்டியன், தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்்மானங்கள் வருமாறு:-
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்க வேண்டு்ம் என போராடி வரும் நிலையில் வேதாந்தா நிறுவனத்திற்கு கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 2,674 சதுர கி.மீ பரப்பளவு நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதன் மூலம் பா.ஜனதா அரசு தமிழகத்திற்கு, குறிப்பாக காவிரி டெல்டா மக்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. அதற்கு தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு துணை போய்க்கொண்டு இருக்கிறது. உடனடியாக வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறவேண்டும்.
வருகிற 22-ந் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சி மதுரையிலும், சென்னையிலும் நடைபெற உள்ளது. அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.