விவசாய படிப்புகளில் கவனம் திருப்பும் இளைஞர்கள்
வேளாண் கல்விக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது
வேளாண்மை செய்பவர்களும், விளைச்சல் நிலங்களும் குறைந்து வருவது எதிர்காலத்தில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் கல்வியாளர்களின் தேவையை அதிகமாக்கி இருக்கிறது. எனவே வேளாண் கல்விக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதற்கேற்ப விவசாயம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வேளாண் துறையில் சாதிக்க விரும்புபவர்கள் கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் மற்றும் தொழில்பயிற்சியில் பங்கெடுக்கலாம். தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) அக்ரிகல்சர், ஹார்டிகல்சர், புட், நியூட்ரிசியன் அண்ட் டயட்டிக்ஸ், பாரஸ்ட்ரி, செரிகல்சர், அக்ரிகல்சர் என்ஜினீயரிங், அக்ரிபிசினஸ் மேனேஜ்மென்ட், புட் டெக்னாலஜி, எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் என்ஜினீயரிங் போன்ற இளநிலை படிப்புகளில் சுமார் 3900 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதில் பி.எஸ்சி. அக்ரிகல்சர் படிப்பில் மட்டும் 3 ஆயிரத்து 105 இடங்கள் உள்ளன. தோட்டக்கலையில் 360 இடங்கள் உள்ளன.
பிளஸ்-2 அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம். பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலாந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இணையதளம் வழியாக கவுன்சலிங் நடக்க இருக்கிறது.
இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள் ஜூன் 7-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை www.tnau.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.