எருமப்பட்டி அருகே பட்டாசு வெடித்து பட்டதாரி பலி துக்க வீட்டுக்கு வந்தபோது பரிதாபம்

எருமப்பட்டி அருகே, துக்க வீட்டுக்கு வந்த பட்டதாரி பட்டாசு வெடித்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-12 22:15 GMT
எருமப்பட்டி, 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள நவலடிப்பட்டியை சேர்ந்த மாராயி (வயது 70) என்ற மூதாட்டி இறந்து போனார்.

இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாராயியின் உறவினரான பெரம்பலூர் பகுதியை சேர்ந்த அய்யாகண்ணு மகன் எம்.எஸ்சி. முதுகலை பட்டதாரியான அன்பரசன் (28) வந்திருந்தார்.

அப்போது பட்டாசு வெடித்த அன்பரசன், மீதி பட்டாசை கையில் வைத்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர் வைத்திருந்த பட்டாசு மீது தீப்பொறிபட்டு பட்டாசு வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த அன்பரசனை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். துக்க வீட்டுக்கு வந்த பட்டதாரி பட்டாசு வெடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்