வேலூரில் ஹலோ எப்.எம் 91.5 சார்பில் ‘அம்மாவும் நானும்’ திறமை திருவிழா டி.ஐ.ஜி. வனிதா தொடங்கி வைத்தார்

ஹலோ எப்.எம். 91.5 சார்பில் வேலூரில் ‘அம்மாவும் நானும்’ எனும் திறமைத்திருவிழா நடந்தது. இதனை வேலூர் சரக டி.ஐ.ஜி.வனிதா தொடங்கிவைத்தார்.

Update: 2019-05-12 22:30 GMT

வேலூர், 

தமிழகத்தின் முன்னணி பண்பலை வானொலியான ஹலோ எப்.எம். 91.5 சார்பில் அம்மா– மகள் உறவை கொண்டாடும் வகையில் ‘அம்மாவும் நானும்‘ எனும் திறமைத்திருவிழா வேலூர் அண்ணாசாலையில் உள்ள லட்சுமி கார்டன் பள்ளியில் நடந்தது. இதில் வேலூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. வனிதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பெண்கள் சாதிக்கவும், அவர்கள் வெற்றிபெறவும் வீட்டில் அம்மா–மகள் இடையேயான உறவில் இருக்கவேண்டிய புரிதல் மற்றும் பங்களிப்பு பற்றி விளக்கினார். லட்சுமி கார்டன் பள்ளி தாளாளர் ஆனந்திராஜேந்திரன், பள்ளி முதல்வர் பர்வீன்அஸ்லாம், டாக்டர் நர்மதா அசோக், பேராசிரியைகள் வித்யா, ஜெயஸ்ரீ ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

தொடர்ந்து அம்மாவும் மகளும் இணைந்து நடனமாடும் ஜோடி நடன போட்டி, ‘சிங்கிங் ஸ்டார்’ போட்டி, அம்மாபற்றி மகள் கவிதை எழுதும் ‘அன்பென்றாலே அம்மா’ என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. பிரீத்தி ஸோடியாக் 2.0 வழங்கிய ‘சவாலுக்குரெடியா’ மற்றும் ‘சாப்பிங்ராணி’ எனும் காய்கறி வெட்டும் போட்டியும் நடைபெற்றது.

‘தினத்தந்தி’ நாளிதழ் மக்களின் தினசரி வாழ்க்கையில் வகிக்கும் முக்கிய பங்குபற்றி, அம்மா மகள் தங்களது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ‘தமிழும் தினத்தந்தியும்’ என்ற தலைப்பிலான சிறப்பு போட்டியும் நடைபெற்றது. அனைத்து போட்டிகளுக்கும் ஹலோ எப்.எம். சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மாலையில் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைத்து அம்மா மகளும் போட்டி நடைபெற்றது. அதில் ஜனனி, அமுதா ஆகியோர் முதல் பரிசான எல்.இ.டி. டி.வி. பெற்றனர். பாக்கியலதா, கோகிலா ஆகியோருக்கு இரண்டாவது பரிசாக வாஷிங்மிஷினும், பிரியதர்ஷினி, கோடீஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது பரிசாக பிரிட்ஜும் வழங்கப்பட்டது. ஹலோ எப். எம் சார்பில், லட்சுமிகார்டன் பள்ளி தாளாளர் ஆனந்திராஜேந்திரன், ஸ்ரீசாய்சபரி ரெஸ்டாரென்ட் உரிமையாளர் பூமிநாதன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் இந்தநிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஆட்டோமெட்டிக் செல்பி பூத்தில் புகைப்படம் எடுக்கப்பட்டு உடனடியாக பிரிண்ட்செய்து வழங்கப்பட்டது. மேலும் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சிமையம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு இலவச மருத்துவமுகாமும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து பெண்களுக்கும் மதியஉணவு வழங்கப்பட்டது.

‘தினத்தந்தி’, மாஸ்டர்ஜீ ஐ.ஐ.டி. அகாடமி, டார்லிங் டிஜிட்டல் வேர்ல்டு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை வழங்கினர்.

மேலும் செய்திகள்