நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு; வாலிபருக்கு வலைவீச்சு
புதுவையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்க நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுவை லாஸ்பேட்டை அசோக் நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் மகிமைதாஸ். ஓய்வுபெற்ற ரோடியர் மில் ஊழியர். இவரது மனைவி மகிமை ரத்தினம் (வயது 65). பாரதிதாசன் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
பிரார்த்தனை முடிந்ததும் மகிமை ரத்தினம் மட்டும் தனியாக வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் பாரதியார் சாலையில் வந்துகொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் அவருக்கு பின்னால் வந்தார்.
அவர் திடீரென மகிமை ரத்தினம் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மகிமை ரத்தினம் சத்தம்போட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர் மகிமை ரத்தினம் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை வில்லியனூர் ஒட்டாம்பாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது42). இவருடைய மனைவி தமிழ்செல்வி (40). இவர் சம்பவத்தன்று புதுவை சட்டப்பேரவை அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவர் ஸ்கேன் எடுக்க சென்றார். அங்கிருந்த நபர் நகைகளை கழட்டி வைத்துவிட்டு வரும்படி கூறியதாக தெரிகிறது. எனவே தமிழ்செல்வி சங்கிலியை கழட்டி தனது மணிபர்சில் வைத்துவிட்டு ஸ்கேன் எடுக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவருடைய மணிபர்சை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேதராப்பட்டை சேர்ந்தவர் சாரதா (வயது 48). இவர் தனது தாயின் நினைவு நாளை முன்னிட்டு அதே பகுதியில் உள்ள தனது தம்பி ராமலிங்கம் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று இரவு தம்பியின் வீட்டிலேயே தங்கினார்.
நள்ளிரவில் மர்ம ஆசாமி யாரோ வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். அவன் சாரதா அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். அப்போது சாரதா சத்தமிடவே உறவினர்கள் எழுந்து அந்த மர்ம ஆசாமியை விரட்டினார்கள். ஆனால் அவனை பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற இவர்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்துக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். நேற்று முன்தினமும் மகிமைதாஸ் மகிமை ரத்தினத்தை தேவாலயத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் அவர் வேறு வேலை நிமித்தமாக அங்கிருந்து சென்றுவிட்டார்.