தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.;

Update: 2019-05-11 22:00 GMT
தேன்கனிக்கோட்டை, 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி. இவர்கள் 2 பேரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த உரிகம் கிராமத்தை சேர்ந்த 19 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் அங்கிருந்து தப்பி ஓடி, கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு கிராமமக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சார்பில் அவரது பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தா, சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 2 வாலிபர்கள் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார். போலீஸ் தேடி வரும் வாலிபர்களில் ஒருவர் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆவார். இன்னொருவர் கட்டிட தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்