ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் கைது

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-11 23:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை சிபி காலனியை சேர்ந்தவர் ராமர். இவரது மகன் கண்ணன் (வயது 27). இவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் நகரில் சொந்தமாக ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையை சேர்ந்த ஆனந்த் என்பவரின் ஆட்டோ கண்ணாடியை உடைத்துவிட்டாராம். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆனந்த் உள்ளிட்ட சிலர் சம்பவத்தன்று கண்ணனின் ஆட்டோவை ஈசனூர் கிராமத்திற்கு வாடகைக்கு எடுத்து செல்வது போல் நடித்து இலந்தகுடிபட்டி கண்மாய் அருகே அவரை வெட்டி கொலை செய்தனர்

இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் ஆனந்த், ரஞ்சித் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நகர் இன்ஸ்பெக்டர் அழகர் தீவிர விசாரணை நடத்தி அரவிந்த் (27), பிரவீன் (24), வசந்த் (25), அருண்பாண்டியன்(24) ஆகிய 4 பேரை கைது செய்தார்.

மேலும் செய்திகள்