புதுச்சேரியில் கம்பன் விழா: சமூகத்தை நல்வழிப்படுத்தும் நெறிகளை தந்தது கம்ப ராமாயணம் - மலேசிய எம்.பி. பேச்சு
சமூகத்தை நல்வழிப்படுத்தும் நெறிகளை தந்தது கம்ப ராமாயணம் என்று மலேசிய எம்.பி. டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கம்பன் கழகம் சார்பில் 54-வது ஆண்டு கம்பன் விழா புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு வரவேற்று பேசினார்.
ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
இலங்கை மண்ணில் கம்பன் விழா நடைபெறும் போது ஏராளமான இளைஞர்கள் இருப்பார்கள். அதனை புதுவை முறியடித்துள்ளது. கம்பனை பற்றி கேட்பதற்காகவே இந்த இளைஞர்கள் இங்கு வந்துள்ளனர். தமிழன் தான் வசிக்கும் நிலத்தை 5 ஆகவும், காற்றை நான்காகவும், வாழ்வை 2 ஆகவும் பிரித்து வைத்துள்ளான். எல்லாவற்றிற்கும் மேலாக ஒழுக்கத்தை உயர்வாகவும் போற்றுபவன் தமிழன். அதனைத் தான் திருவள்ளுவர் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என கூறியுள்ளார்.
கம்பனை ரசிப்பவர்கள் இருக்கும் வரை கம்பன் உயிரோடு இருப்பான். கம்ப ராமாயணத்தில் உள்ள கருத்துகள் இந்த காலத்தில் உள்ள இளைஞர்கள் நல்ல பாதைக்கு செல்வதற்கு கருவியாக இருக்கும். இன்று நாம் படிக்கும் பாடத்திட்டம் மாணவர்கள் மதிப்பெண்கள் பெறுவதற்கு மட்டும் தான் உதவுகிறது. ஆனால் சமூகத்தை நல்வழிப்படுத்தும் நெறிகளை தந்தது கம்ப ராமாயணம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
கம்பன் விழாவை நடத்துவதில் புதுச்சேரிக்கு தனி சிறப்பு உண்டு. புதுச்சேரியில் மட்டும்தான் அரசும் புலவர்களும் இணைந்து கம்பன் விழாவை நடத்துகிறோம்.
புதுச்சேரி கம்பன் விழாவில் கம்பன், ராமர், லட்சுமணன், அனுமானை பற்றி கவிஞர்கள் தங்கள் எண்ணங்களில் உள்ள கருத்துகளை பரிமாறும்போது பல மாநிலங்களில் இருந்து வந்துள்ள தமிழ் அறிஞர்களும், பொதுமக்களும் ரசித்து கேட்கின்றனர். இந்த விழா புதுவையில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடந்து வருகிறது. புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் தமிழகத்திற்கு இளைத்தவர்கள், சளைத்தவர்கள் அல்ல. தமிழ் எழுத்தாளர்களையும், புலவர்களையும் போற்றுவதில் முதன்மையாக செயல்பட்டு வருகின்றோம்.
திருவள்ளுவர், கம்பன், சுதந்திர தனலை கொடுத்த பாரதி, புரட்சி கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட அனைத்து எழுத்தாளர்களையும் புலவர்களையும் பாராட்டும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது. அண்மையில் கூட சாகித்ய அகாடமி விருது பெற்ற புதுச்சேரியை சேர்ந்த எழுத்தாளர் பிரபஞ்சன் மறைந்தபோது, உலகில் எங்கும் இல்லாத வகையில் அவருக்கு அரசு சார்பில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. தமிழை போற்ற வேண்டும், காக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகின்றோம்.
ராமன் காட்டில் அகத்தியரை தமிழாக, தவமாக வணங்கினார். கம்ப ராமாயணத்தில் இல்லறம், சொல்லறம், நட்புக்கள் போன்ற பல கருத்துகள் சொல்லப்பட்டு உள்ளது. பாரதியார் கூட வள்ளுவனைப்போல், இளங்கோவனைப்போல், கம்பனைப்போல் யாரும் இல்லை என்று பாராட்டியுள்ளார். அறம் வெல்லும், அதர்மம் தோற்கும் என்பதே கம்ப ராமாயணத்தின் மைய கருத்து.
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் இருக்கலாம், ஆனால் அறமற்று இருக்க கூடாது. அறமற்ற வாழ்வு, அர்த்தமற்ற வாழ்வாக இருக்கும். அறம் வெல்லும் என்பதை நாம் இப்போது புதுச்சேரியில் பார்த்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:-
கம்பனுக்கும், கம்பன் கழகத்திற்கும், தமிழுக்கும் 3 சிறப்புகள் உள்ளன. தமிழ்மொழி சிவபெருமானால் உருவாக்கப்பட்டது என கம்பனே கூறியுள்ளார். கம்பராமாயணம் 100 மொழிகளில் குறிப்பாக 25 வெளிநாடுகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. யாருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கம்பராமாயணத்தில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 2-ம் உலகப்போருக்கு பின்னர் தான் அகதி என்று ஒரு வார்த்தை உருவானது. அதற்கு முன்பாகவே அகதிக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. கலியுகம் எப்போது தொடங்கும் என்று கம்பன் வழக்காடு மன்றம் நடத்தி அதில் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டனர். தொடர்ந்து தமிழறிஞர்கள் அருணகிரி, டாக்டர் ரத்தின ஜனார்த்தனன், செங்கமலத்தாயார் ஆகியோருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நூல்களை வெளியிட்டு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் துணை சபா நாயகர் சிவக்கொழுந்து, செல்வ கணபதி எம்.எல்.ஏ., கம்பன் கழக தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி. சி.பி.திருநாவுக்கரசு, தமிழ்ச்சங்க தலைவர் முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.