அகவிலைப்படி வழங்காத, தமிழக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - திருவாரூரில் 5 இடங்களில் நடந்தது
அகவிலைப்படி வழங்காத தமிழக அரசை கண்டித்து திருவாரூரில் 5 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
அகவிலைப்படி வழங்காத தமிழக அரசை கண்டித்து திருவாரூரில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் சவுந்தர ராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசு உடனடியாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட இணை செயலாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட இணை செயலாளர் தம்பிதுரை தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் சின்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அகவிலைப்படி வழங்காத தமிழக அரசை கண்டித்து திருவாரூர் வட்டத்தில் 5 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வலங்கைமான் பழைய தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். இதில் வட்ட துணைத்தலைவர் மாரியப்பன், மாவட்ட இணைச்செயலாளர் தனபால், மாவட்ட தலைவர் மகேஷ், மாவட்ட துணைத்தலைவர் ரவி, வட்ட செயலாளர் கருப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டு 3 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.