நெல்லையில் தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

நெல்லையில் தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-05-10 21:30 GMT
நெல்லை, 

நெல்லையில் தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொழிலாளி கொலை

நெல்லை டவுன் பாட்டப்பத்து வீரவாஞ்சிநாதன் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 44) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி (40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 8-ந் தேதி இரவில் வீட்டில் காந்திமதி தன்னுடைய கணவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காந்திமதியை கைது செய்தனர்.

கைதான காந்திமதி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உறவுகொள்ள...

தையல் தொழிலாளியான நான் சாக்குப்பைகளை மொத்தமாக வாங்கி வந்து, அதனை தைத்து கொடுத்து வந்தேன். என்னுடைய 3 மகள்களும் பள்ளிக்கூடத்தில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் என்னுடைய கணவர் ராதாகிருஷ்ணன் தினமும் இரவில் மகள்கள் தூங்குவதற்கு முன்பாகவே, என்னிடம் உறவுகொள்ள கட்டாயப்படுத்தி வந்தார். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவிலும் என்னுடைய கணவர் மதுகுடித்து விட்டு வந்து, மகள்கள் தூங்குவதற்கு முன்பாக என்னிடம் உறவுகொள்ள கட்டாயப்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கணவரை அடித்து கீழே தள்ளி விட்டு, கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்.

பின்னர் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று சரண் அடைந்தேன்.

இவ்வாறு கைதான காந்திமதி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்