நாரைக்கிணறு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர பிரசாரம்

நாரைக்கிணறு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-05-10 22:15 GMT
ஓட்டப்பிடாரம், 

நாரைக்கிணறு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் சண்முகையா நேற்று காலையில் புளியம்பட்டி அருகே உள்ள மருதன்வாழ்வு, நாரைக்கிணறு, கொள்ளங்கிணறு, ஒட்டநத்தம், அக்காநாயக்கன்பட்டி, கொடியன்குளம், கீழக்கோட்டை ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நாரைக்கிணறு பகுதியில் அவர் கூறியதாவது;-

அடிப்படை வசதிகள்

புளியம்பட்டி, ஒட்டநத்தம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பஸ் வசதி இல்லாமல் கிராமங்கள் உள்ளன. இதனால் ஓட்டப்பிடாரத்தை தலைமை இடமாக கொண்டு அரசு போக்குவரத்து பணிமனை அமைக்கப்படும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் பஸ் வசதி செய்து கொடுக்கப்படும். ஒட்டநத்தம் சுற்றுவட்டார பகுதி மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையான, தலைமை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுப்பேன். சாலை வசதி, தாமிரபரணி கூட்டு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்