கண்ணமங்கலம் பகுதியில் போலி டாக்டர் கைது கொல்கத்தாவை சேர்ந்தவர்

கண்ணமங்கலத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-10 23:00 GMT
கண்ணமங்கலம், 

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ராஜீவ்குமார் பிஸ்வாஸ் (வயது 30). இவர் பி.எஸ்சி. வரை மட்டும் படித்து உள்ளார். தற்போது கண்ணமங்கலம் ஜாகீர்உசேன் தெருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் மாடி கட்டிடத்தில் கிளினிக் நடத்தி வந்துள்ளார்.

ராஜீவ்குமார் பிஸ்வாஸ் உரிய படிப்பு படிக்காமல் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பின்றி மூலம், பவுத்திரம் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட கலெக்டர் கந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாண்டியன் மற்றும் குழுவினர் ராஜீவ்குமார் பிஸ்வாஸ் கிளினிக்கில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ராஜீவ்குமார்பிஸ்வாஸ் உரிய படிப்பு படிக்காமல் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவரை பிடித்து கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்குமார்பிஸ்வாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்