சேலத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

சேலத்தில் ரெயில்வே ஊழியர் வீட்டில் 7 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-05-09 22:45 GMT
சேலம், 

சேலம் திருவாக்கவுண்டனூர் வசந்தம் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 58), ரெயில்வே ஊழியர். இவர் கடந்த 7-ந் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை அவருடைய வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் வசிப்பவர்கள் இதுகுறித்து கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கணேசன் சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீட்டுக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்