மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 96.24 சதவீதம் பேர் தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 96.24 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2019-05-08 22:45 GMT
திண்டுக்கல்,

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ்-1 தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளி யிடப்பட்டது. இதை யடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அவர்களின் செல்போனுக்கு வந்தது. இதனால் பெரும் பாலான மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே மதிப் பெண்கள் விவரத்தை அறிந்து கொண்ட னர். ஒரு சிலர் மட்டுமே பள்ளிக்கு வந்து மதிப்பெண்கள் விவரத்தை தகவல் பலகையில் பார்த்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 203 பள்ளி களை சேர்ந்த 19 ஆயிரத்து 967 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 302 மாணவர்களும், 10 ஆயிரத்து 665 மாணவிகளும் அடங்குவர். தேர்வு எழுதியவர்களில் 8 ஆயிரத்து 791 மாணவர்கள், 10 ஆயிரத்து 426 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 217 பேர் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 511 மாணவர் கள், 239 மாணவிகள் என மொத்தம் 750 பேர் தேர்வில் தோல்வி அடைந் தனர்.

இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதியவர்களில் 96.24 சத வீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்ச்சி விகிதம் 91.2 சதவீதம் ஆகும். இதன்மூலம் இந்த ஆண்டு 5.04 சதவீதம் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, வத்தலக் குண்டு, வேடசந்தூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் திண்டுக்கல் கல்வி மாவட்டம் 96.60 சதவீதமும், பழனி கல்வி மாவட்டம் 97.01 சதவீதமும், வத்தலக்குண்டு கல்வி மாவட்டம் 96.13 சத வீதமும், வேடசந்தூர் கல்வி மாவட்டம் 94.47 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. அந்த வகையில் பழனி கல்வி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 

மேலும் செய்திகள்