கோர்ட்டு தீர்ப்பை ஏற்று கவர்னர் கிரண்பெடி ராஜினாமா செய்ய வேண்டும்; ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் கூட்டமைப்பு தீர்மானம்
புதுச்சேரி மாநிலத்தில் கவர்னரின் அதிகாரம் குறித்து சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை ஏற்று கவர்னர் கிரண்பெடி ராஜினாமா செய்ய வேண்டும் ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாகூர்,
புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் தவளக்குப்பத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் ரோக.அருள்தாஸ் தலைமை தாங்கினார். கவுரவதலைவர் திருமால், பேரவை தலைவர் முருகையன் பொதுச்செயலாளர் கலைமணி, தலைமை நிலைய செயலாளர் சொக்கலிங்கம், அமைப்பு செயலாளர் பொன்னிவேல், முதன்மை செயலாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
*புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி அதிகாரம் குறித்து உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை ஆதி திராவிடர் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதனை ஏற்று கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும்.
*கவர்னர் கிரண்பெடி நியமித்த 3 எம்.எல்.ஏக்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அவர் களுக்கு வழங்கிய சம்பளத்தையும் திரும்ப பெற வேண்டும்.
*ஐகோர்ட்டு உத்தரவுப்படி புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்த தனியார் பள்ளிகளும் இதனை கடைபிடிப்பதில்லை. நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக கட்டணத்தை உயர்த்தி வருகிறார்கள். எனவே அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
*1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக அந்த கல்வி உதவித் தொகையை வழங்கவேண்டும்.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் நகர தலைவர் ஆதிகேசவன், கொள்கைப்பரப்பு செயலாளர் இளையபெருமாள், துணை பொதுச்செயலாளர் பாலச்சந்தர், இளைஞர் அணி தலைவர் தமிழ்மன்னன், தொண்டர் அணி தலைவர் மாயகிருஷ்ணன், மாநில செயலாளர்கள், கண்ணன், பாவேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இளைஞர் அணி தலைவர் தமிழ் மன்னன் நன்றி கூறினார்.