வத்திராயிருப்பு அருகே தொடர் மின் தடையால் இருளில் மூழ்கும் கிராமங்கள்
வத்திராயிருப்பு அருகே தொடர் மின்தடையால் கிராமங்கள் இருளில் மூழ்குகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வத்திராயிருப்பு அருகே உள்ள சுரைக்காய்பட்டி மற்றும் ஆயர்தர்மம் ஆகிய கிராமங்களுக்கு வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து மின் இணைப்பு வழங்கி வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதில் மாற்றம் செய்யப்பட்டு எரிச்சநத்தம் துணை மின் நிலையத்துடன் இந்த கிராமங்களை இணைத்தனர்.
மின் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்ட பின்பு, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மின் வழித்தடத்தில் தொடர்ந்து பழுது ஏற்படுகிறது. பழுதை கண்டுபிடித்து சீரமைக்க ஒரு நாளில் இருந்து 2 நாட்கள் வரை ஆகிறது. அதுவரை வீடுகளில் மின்சாரம் இல்லாமல் இருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.
சுரைக்காய்பட்டியில் கிழக்கு தெருவில் ஒரு பகுதியில் சுமார் 50 வீடுகளுக்கு வத்திராயிருப்பு துணை மின் நிலையத்தில் இருந்து எவ்வித தடையும் இன்றி மின்சாரம் கிடைக்கிறது. மறுபுறம் அடிக்கடி இருளில் மூழ்குகிறது. இவ்விதமாக சுரைக்காய்பட்டி மற்றும் ஆயர்தர்மம் ஆகிய கிராமங்களில் உள்ள 500–க்கும் மேற்பட்ட வீடுகள் மாதத்தில் பாதி நாட்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளன.
எரிச்சநந்தம் துணை மின் நிலையம் தூரமாக உள்ளதால் மின் வழித்தடத்தில் ஏற்படும் பழுதை இனம் காணுவது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த இரு கிராமங்களையும் மீண்டும் வத்திராயிருப்பு துணை மின் நிலையத்துடன் இணைக்கக் கோரி மின் துறை கோட்டப் பொறியாளர், இளநிலை பொறியாளர், இளமின் பொறியாளர் மற்றும் மண்டல பொறியாளர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோடைகாலமாக இருப்பதால் மின் தடையால் அனைவரும் இன்னலுக்கு ஆளாகி வருவதால் இதில் போர்க்கால நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு இந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.