கீழ்வேளூர் ஒன்றியத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் - மத்திய குழுவினர் ஆய்வு

கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2019-05-08 22:30 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை டெல்லியில் இருந்து வந்துள்ள மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மத்திய குழு தலைவர் குப்தா தலைமையிலான ஒரு பிரிவினர் கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காலத்தூர் ஊராட்சியில் நடக்கும் பணிகளை பார்வையிட்ட குழுவினர், தொடர்ந்து ஊராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் வடக்காலத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் பராமரிக்கும் பணியை பார்வையிட்டு அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

பின்னர் சிகார் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளை பார்வையிட்ட குழுவினர், அங்கிருந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது உதவி இயக்குனர் பேபி, உதவி திட்ட அலுவலர் மோகன், ஆணையர் திருமலைகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் வெற்றிவேல் உள்பட பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்