ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவசேனா கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது
மிரா பயந்தரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவசேனா கவுன்சிலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
மிரா பயந்தரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவசேனா கவுன்சிலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம் கேட்டு மிரட்டல்
தானே மாவட்டம் மிரா பயந்தரை சேர்ந்த ஒருவர் மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் தனது வீட்டில் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் வீட்டை சீரமைத்து வந்த நபரை அந்த பகுதியை சேர்ந்த சிவசேனா கவுன்சிலர் கம்லேஷ் போயர் (வயது50), கட்டுமான ஒப்பந்ததாரர் கோரக் தாக்கூர் (48) ஆகியோர் சந்தித்து பேசினார்.
அப்போது அவர்கள் ரூ.25 ஆயிரம் தரவில்லையென் றால் மிரா பயந்தர் மாநகராட்சியிடம் புகார் அளித்து சீரமைப்பு பணிகள் நடந்து வரும் வீட்டை இடித்துவிடுவோம் என மிரட்டினர்.
கவுன்சிலர் கைது
இதுகுறித்து பாதிக்கப் பட்டவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். பின்னர் அவர், லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த யோச னையின் படி கோரக் தாக்கூரை சந்தித்து ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் கோரக் தாக்கூரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவ லின்பேரில் கவுன்சிலர் கம்லேஷ் போயரையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.