உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம்; கலெக்டர் தகவல்

உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக நாளை மறுநாளைக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-07 22:30 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்காக ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்தல் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் கடந்த மாதம் 22–ந் தேதியன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 4–ந்தேதியன்று இறுதி வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இறுதி வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வருகிற 14–ந் தேதி வரை கூடுதல் கால அவகாசம் அளித்துள்ளது.

எனவே பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் குறித்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை ஏதும் இருந்தால் நாளை மறுநாளைக்குள் தொடர்புடைய ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் தெரிவிக்கலாம். இறுதி வாக்குச்சாவடி பட்டியல் 14–ந் தேதியன்று வெளியிடப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்