54–ம் ஆண்டு கம்பன் விழா 10-ந் தேதி தொடக்கம்

புதுச்சேரியில் 54-ம் ஆண்டு கம்பன் விழா வருகிற 10-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

Update: 2019-05-05 23:33 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கம்பன் கழகம் சார்பாக 54-வது ஆண்டு கம்பன் விழா கம்பன் கலையரங்கில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விழா நடக்கிறது.

தொடக்க விழாவில் காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி வரவேற்புரையாற்றுகிறார். விழாவுக்கு ஐதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமை தாங்குகிறார். கவர்னர் கிரண்பெடி வாழ்த்திப் பேசுகிறார். சிறப்பு விருந்தினரான மலேசியா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீஎம்.சரவணன் சிறப்புரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து நூல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.பி.க்கள் கோகுலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நூல்களை வெளியிட உள்ளனர். அதையடுத்து 11.30 மணிக்கு எழிலுரை, மாலை 5 மணிக்கு தனியுரை, 6.30 மணிக்கு கருத்தரங்கம் ஆகியவை நடக்கிறது.

11-ந் தேதி காலை 9 மணிக்கு இளையோர் அரங்கம், 10.15 மணிக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், 10.45 மணிக்கு வழக்காடு மன்றம், மாலை 5 மணிக்கு கவியரங்கம், 5.30 மணிக்கு பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 12-ந் தேதி காலை 9 மணிக்கு சிந்தனை அரங்கம், பகல் 12 மணிக்கு பாராட்டரங்கம், மாலை 5 மணிக்கு தனியுரை, 5.45 மணிக்கு மேல்முறையீடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இத்தகவலை கம்பன் கழக செயலாளரும், சட்டசபை துணை சபாநாயகருமான சிவக்கொழுந்து, பொருளாளர் செல்வகணபதி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்