முன்விரோத்தில் அண்ணன் –தம்பியை கத்தியால் குத்தியவர் கைது

முன்விரோத்தில் அண்ணன்– தம்பியை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-05 22:52 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மகன் ஆறுமுகம் (வயது 20). இவரது அண்ணன் குருசாமி(23). இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்களுக்கும் சமுசிகாபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்ற வேல்முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.

ஆறுமுகம், குருசாமி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு வாகைக்குளம்பட்டி ரே‌ஷன் கடை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வேல்முருகன், ஆறுமுகத்தை தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகத்தை குத்தினார். இதை தடுக்க முயன்ற குருசாமியையும் அவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

கத்திக்குத்தில் காயம்பட்ட அண்ணன், தம்பி இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்