எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2019-05-05 22:30 GMT
கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி காட்டுக்கொல்லை தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ஜனா (வயது 16). அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். இவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைவான மதிப்பெண்களே எடுத்து தேர்ச்சி பெற்று இருந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜனா, கடந்த 1-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் ஜனா, நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்