சித்தரேவில் தென்னந்தோப்புகளில் பயங்கர தீ
சித்தரேவில் தென்னந்தோப்புகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, மருதாநதி அணை, சித்தயன்கோட்டை, ஒட்டுப்பட்டி, சேவுகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் 1,000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதனால் சொட்டு நீர் பாசனம் மூலமே தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஒரு சில பகுதிகளில் கடும் வெயில் காரணமாக தென்னை மரங்கள் பட்டு வருகின்றன.
இந்தநிலையில் சித்தரேவை சேர்ந்த சாதிக்பாட்சா, ராமுவேல் ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்புகள் அத்திக்குளம் பகுதியில் உள்ளது. இந்த தென்னந்தோப்புகளின் வழியாக மின்கம்பிகள் செல்கின்றன. தற்போது வறட்சி காரணமாக இந்த தென்னந்தோப்புகளில் பெரும்பாலான தென்னை மரங்கள் பட்டுப்போய் இருந்தன.
இதற்கிடையில் நேற்று மின்கம்பியில் ஒரு தென்னை மரத்தின் மட்டை உரசியதால் காய்ந்த தென்னை ஓலையில் தீப்பிடித்தது. இதனையடுத்து அருகருகே உள்ள தென்னை மரங்களுக்கும் தீப்பிடித்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. தென்னந்தோப்பு முழுவதும் தீ பரவியதால் பற்றி எரிந்தது.
தென்னந்தோப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்ந்த ஓலைகள், மட்டைகள் கொழுந்து விட்டு எரிந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். இருப்பினும் தென்னந்தோப்புகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமானது. இதன்மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என உரிமையாளர் கள் தெரிவித்தனர்.