பல்லடம் அருகே நூற்பாலை மேலாளரிடம் ரூ.2½ லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி நூற்பாலை மேலாளர் காரில் கொண்டு சென்ற ரூ.2½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பல்லடம்,
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி பல்லடம்- உடுமலை சாலையில் சித்தம்பலம் பிரிவு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆறுமுகம், பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், போலீஸ்காரர் சதாம் உசேன் ஆகியோர் நேற்று தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மறித்து சோதனை நடத்தினர். அந்த காரில் 3 பேர் இருந்தனர். சோதனையில் காரின் சீட்டுக்கு இடையில் ஒரு பையில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. மேலும் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் நம்பியூர் கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு நூல் மில்லில் தங்கி மேலாளராக வேலை பார்த்து வருபவர் வி.சரவணன் (வயது 48) மற்றும் அந்த நூல் மில்லில் வேலை பார்க்கும் 2 ஆலைத்தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள் 3 பேரும் நம்பியூரில் இருந்து உடுமலைக்கு நூல் மில்லுக்கு தேவையான 2-ம் தர எந்திரங்கள் வாங்க செல்வதாகவும், அதற்காக அந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் எதுவும் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி மயில்சாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை கொண்டு வந்து கொடுத்து விட்டு பணத்தை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தி 3 பேரையும் தேர்தல் அதிகாரி அனுப்பி வைத்தார்.