நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் 3½ மணி நேரம் தாமதம்

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் 3½ மணி நேரம் தாமதம்.

Update: 2019-05-04 22:30 GMT

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமை தோறும் ஹவுராவுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 8.30 மணிக்கு புறப்படும். ஆனால் நேற்று இந்த ரெயில் 3½ மணி நேரம் தாமதமாக பகல் 12 மணிக்கு புறப்பட்டது. ரெயில் தாமதம் குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, "பானி புயல் காரணமாக வட மாநிலங்கள் வழியாக இயக்கப்படும் ரெயில்களின் நேரம் தற்சமயத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல ரெயில்கள் தாமதமாக புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் வட மாநிலங்கள் வழியாக செல்வதால் தாமதமாக புறப்பட்டு சென்றது" என்றனர்.

மேலும் செய்திகள்