வெயில் தாக்கம் குறைய வேண்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

வெயில் தாக்கம் குறைய வேண்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-05-04 22:30 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நீலத்தநல்லூர் சாலை காமராஜர் நகர் மெயின் சாலையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறைய வேண்டியும், தேவையான அளவு கோடை மழை பெய்து வறட்சி நீங்க வேண்டியும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி கோவிலில் தொடர்ந்து 5 மணி நேரம் அகண்ட ராமநாம பாராயணம், வருண ஜெபம், நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

ராமர் அலங்காரம்

அதைத்தொடர்ந்து கோவிலில் வீற்றிருக்கும் 11 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு ராமர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராமர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்