வங்கியில் 13¾ கிலோ நகைகள் மாயம் கொலை செய்யப்பட்ட ஊழியருக்கு தொடர்பா? போலீசார் விசாரணை
புதுக்கோட்டையில் உள்ள வங்கியில் 13¾ கிலோ நகைகள் மாயமாகி உள்ளது என அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். நகை மாயமானதில் கொலை செய்யப்பட்ட ஊழியருக்கு தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
மாரிமுத்து கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து தனது காரில் வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனக்கூறி அவரது மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவின் கார் வல்லத்திராக்கோட்டை பகுதியில் உள்ள தைலமர காட்டு பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையா?
மாரிமுத்து திடீரென மாயமானதால், அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்து சென்று இருக்கலாம் என நினைத்த வங்கி அதிகாரிகள் வங்கியில் உள்ள நகைகள் சரியாக உள்ளதா என கடந்த சில நாட்களாக சரி பார்த்தனர். இதற்கிடையில் மாரிமுத்து மணமேல்குடி கோடியக்கரை கடலில் பிணமாக மிதந்தார். இதையடுத்து மாரிமுத்துவின் உடல் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
மாரிமுத்துவின் முதுகு பகுதியில் உள்ள எலும்பு உடைந்தும், கழுத்து பகுதியில் காயத்துடனும், அவரது முகம் சிதைந்த நிலையில் இருந்தது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றும், மாரிமுத்துவை மர்மநபர்கள் கொலை செய்து, கடலில் உடலை வீசி இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13¾ கிலோ தங்க நகைகள் மாயம்
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ்கண்ணன் மற்றும் வங்கி அதிகாரிகள் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் புகார் அளிக்க வந்தனர். அப்போது போலீசார், இந்த புகாரில் முழுவிவரங்கள் இல்லை. நீங்கள் முழுவிவரங்களுடன் வந்து புகார் கொடுங்கள் எனக்கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன் தலைமையில் 9 வங்கி அதிகாரிகள் மீண்டும் புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்து வங்கியில் இருந்த சுமார் 13¾ கிலோ தங்க நகைகள் மாயமானதாக புகார் அளித்தனர். அப்போது வங்கி அதிகாரிகளிடம், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஆகியோர் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் எழுப்பிய பல கேள்விகளுக்கு வங்கி அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போலீசார் மேலும் சில ஆவணங்களை வங்கி அதிகாரிகளிடம் கேட்டனர். அவர் கள் கொண்டு வந்து தருவதாக கூறிவிட்டு சென்றனர்.
மாரிமுத்து நகைகளை எடுத்து சென்றாரா?
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் வங்கியில் இருந்த சுமார் 13¾ கிலோ நகைகள் மாயமாகி உள்ளதாக புகார் அளித்தனர். அப்போது போலீசார் எழுப்பிய பல கேள்விகளுக்கு வங்கி அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் கூடுதல் ஆவணங்களை கொடுத்தால்தான் அடுத்தகட்ட விசாரணையை தொடங்க முடியும். வங்கியில் காணாமல் போன நகைகளை மாரிமுத்து எடுத்து சென்றாரா?.
மாரிமுத்துவிற்கு வங்கியின் சாவி எப்படி கிடைத்தது?. அந்த சாவியை அவருக்கு யார் கொடுத்தது?. மாரிமுத்து தான் நகைகளை எடுத்து சென்றார் என்றால், அவர் நகைகளை எடுத்து சென்றது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளதா?. மாரிமுத்து கடலில் பிணமாக மிதந்தது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் மட்டுமே வங்கியில் காணாமல்போன நகைகளை யார் எடுத்து சென்றார்கள்? என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.