தாவணகெரே அருகே சாலை தடுப்பு கம்பியில் கார் மோதல்; பெங்களூரு தம்பதி பரிதாப சாவு
தாவணகெரே அருகே சாலை தடுப்பு கம்பியில் கார் மோதிய விபத்தில் பெங்களூரு தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். அமாவாசையையொட்டி கோவிலுக்கு சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.;
சிக்கமகளூரு,
பெங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்தவர் சிவராம் பிரகாஷ் (வயது 43). இவரது மனைவி உமா (40). இவர்கள் 2 பேரும் நேற்று அமாவாசை என்பதால் தாவணகெரே மாவட்டம் ஒன்னாள்ளி தாலுகா துக்கடகாத்ரேயில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி கணவன்-மனைவி இருவரும் ஒரு காரில் துக்கடகாத்ரே நோக்கி நேற்று அதிகாலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் அவர்களது கார் தாவணகெரே புறநகர் ஒசகுண்டுவாடா கிராமத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி இடதுபுறம் இருந்த சாலைத்தடுப்பு கம்பியில் மோதியது. மோதிய வேகத்தில் சாலை தடுப்பு கம்பி காருக்குள் புகுந்து பின்பக்கமாக வந்துவிட்டது. இதனால் கார் பலத்த சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த சிவராம் பிரகாஷ், அவரது மனைவி உமா ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காரின் டிரைவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தாவணகெரே போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான தம்பதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாவணகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தாவணகெரே போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அமாவாசைையயொட்டி கோவிலுக்கு சென்ற போது விபத்தில் தம்பதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.