நாகர்கோவிலில் தீக்குளித்த 2 பெண்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நாகர்கோவிலில் தீக்குளித்து பலியான 2 பெண்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில்,
நாகர்கோவில் சரலூரை சேர்ந்தவர் அம்பிகா (வயது 55), மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக இருந்தார். அம்பிகா நடத்தி வந்த சுய உதவிக்குழுவில் ராமன்புதூரை சேர்ந்த ஞானதங்கம் (54) என்பவர் உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுயஉதவிக்குழு மூலமாக ரூ.4 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் கடனை அவர் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நிலையில் கடன் தொகையை கேட்டு ஞானதங்கத்தின் வீட்டுக்கு அம்பிகாவும், சுயஉதவிக்குழு உறுப்பினர் உஷா என்பவரும் சென்றனர். அப்போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஞானதங்கம் திடீரென தன் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்பிகாவும் தன் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக் கொண்டார்.
ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக ஞானதங்கம் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார். இந்த தீ அம்பிகாவின் மீதும் பற்றியது. தீயின் கோரப்பிடியில் சிக்கிய அம்பிகா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார். ஞானதங்கம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து ஞானதங்கம் மற்றும் அம்பிகாவின் உடல்கள் நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலை வாங்குவதற்காக 2 பேரின் உறவினர்களும் பிணவறை முன் சோகத்துடன் காத்திருந்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் உடல்களை வெளியே கொண்டு வந்தனர். தீயில் கருகி இருந்ததால் 2 பேரின் முகமும் சரியாக தெரியவில்லை. ஏற்கனவே பெரும் சோகத்தில் இருந்த உறவினர்கள் கருகிய உடலை பார்த்ததும் கதறி அழ தொடங்கினர். இதனால் பிணவறை முன் ஒரே அழுகுரலாக கேட்டது. உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறிய காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை பெற்றுக் கொண்ட உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்வதற்காக கொண்டு சென்றார்கள்.