மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-05-03 21:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மேலும் 8 கி.மீ. வேகத்தில் காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.

அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் அடுத்த 4 நாட்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்ய வாய்ப்பு இல்லை. பகல் வெப்பம் 102.2 டிகிரியை தொடுவதோடு, இரவு வெப்பம் 78.8 டிகிரியாக ஆக நிலவும். பிற்பகலுக்கு மேல் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும். ஆங்காங்கே மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்த மழையால், தீவன எடுப்பு இயல்பை நோக்கி உயர்ந்தாலும், வெப்ப அயற்சியால் கோழிகளில் தீவன எடுப்பு மீண்டும் குறையும்.

கடந்்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்து உள்ளது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே, பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாளுவதோடு, கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் தெளிப்பான்களை உபயோகிக்க வேண்டும். மேலும் தீவனத்தில் நுண்ணூட்ட சத்துக்களை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்