கிருஷ்ணகிரியில், உள்ளாட்சி அமைப்புகளின் வாக்குச்சாவடி வரைவு பட்டியல் கருத்து கேட்பு கூட்டம்
கிருஷ்ணகிரியில் உள்ளாட்சி அமைப்புகளின் வாக்குச்சாவடி வரைவு பட்டியல் மீது கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் கடந்த மாதம் 23-ந் தேதி வெளியிடப்பட்ட வாக்குச்சாவடி வரைவுபட்டியல் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆட்சேபனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகளின் மீது 3-ந் தேதிக்குள் (இன்று) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய விதிகளின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊரக மற்றும் நகர்புற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வாக்குச்சாவடிகள் பிரித்தல்
ஊரக பகுதிகளில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஒரு வார்டு, வாக்குச்சாவடியை அதே வளாகத்தில் ஆண் மற்றும் பெண் வாக்குச்சாவடிகளாக பிரித்தல் வேண்டும். இதே போல் ஊரக பகுதிகளில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் கொண்ட இரு வார்டு வாக்குச்சாவடியை அதே வளாகத்தில் ஒரு வார்டு கொண்ட வாக்குச்சாவடிகளாக பிரித்தல் வேண்டும்.
நகர்புற பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் கொண்ட வாக்குச்சாவடியை, அதே வளாகத்தில் ஆண் மற்றும் பெண் வாக்குச்சாவடிகளாக பிரித்தல் வேண்டும். தற்போது அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையங்கள் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
இந்த கூட்டத்தில், மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தி.மு.க. நகர செயலாளர் நவாப், ஜான்டேவிட், அ.தி.மு.க. தொகுதி செயலாளர் காத்தவராயன், பா.ஜனதா மாவட்ட தலைவர் முனிராஜ், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வின்சென்ட், பன்னீர்செல்வம், தே.மு.தி.க. வஜ்ஜிரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.