பெரம்பலூரில் மே தின ஊர்வலம் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்பு
பெரம்பலூரில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
உலகம் முழுவதும் மே 1-ந் தேதி தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று உலக தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. பெரம்பலூரில் மே தினத்தை முன்னிட்டு இந்திய தொழிலாளர்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம், அந்த அமைப்பின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. சங்குப்பேட்டையில் தொடங்கிய மே தின ஊர்வலம் காமராஜர் வளைவு, பழைய பஸ் நிலையம், மீண்டும் காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை வழியாக வெங்கடேசபுரத்தில் முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தின்போது பெரியார், காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு தொழிலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பொதுக்கூட்டம்
பின்னர் மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்க தமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் அன்பழகன் மற்றும் தி.மு.க.வினர் பேசினர். கூட்டத்தில், தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை மத்திய-மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். கல்குவாரிகளில் கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். நலவாரியங்களில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு விபத்து நேர்ந்தால் அனைவருக்கும் ஒரே முறையில் விபத்து நிதி வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கத்தினர் சார்பில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது. தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்க கொடியினை சங்கத்தின் மாவட்ட தலைவர் குமார் ஏற்றி வைத்து, நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மே தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்ட இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.