நுண் உரம் தயாரிப்பு மையத்துக்கு குப்பை சேகரிக்க புதிய ஆட்டோக்கள் தயார்
திருப்பூர் மாநகரில் வீடு, வீடாக குப்பையை சேகரித்து நுண் உரம் தயாரிப்பு மையத்தில் வழங்குவதற்காக புதிய ஆட்டோக்களை மாநகராட்சி நிர்வாகம் வாங்கி தயார் நிலையில் வைத்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாள்தோறும் குவியும் குப்பையை அள்ளி, கைவிடப்பட்ட பாறைக்குழிகளில் கொட்டி வருகிறார்கள். 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணியை மாநகராட்சி நிர்வாகமும், 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனமும் மேற்கொண்டு வருகிறது.
மாநகரில் குவியும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து சேகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உணவகங்கள், வீடுகளில் உள்ள உணவுக்கழிவுகள் உள்ளிட்ட மக்கும் குப்பையை சேகரித்து அவற்றில் இருந்து நுண் உரம் தயாரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் நுண் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக ஆண்டிப்பாளையம் பகுதியில் 2 இடங்களில் நுண் உரம் தயாரிப்பு மையம் இன்னும் 2 வாரங்களுக்குள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. அவ்வாறு அந்த மையங்கள் செயல்படும்போது அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பையை சேகரிப்பதற்கு வசதியாக குப்பை அள்ளும் புதிய ஆட்டோக்கள் 34 வாங்கப்பட்டுள்ளது.
அதுபோல் பேட்டரியில் இயங்கும் 3 சக்கர வாகனங்களும் மக்கும் குப்பை சேகரிக்கும் பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது. புதிய வாகனங்கள் அனைத்தும் திருப்பூர் மங்கலம் ரோடு மாட்டுக்கொட்டகை பகுதியில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறும்போது, 2 இடங்களில் நுண் உரம் தயாரிப்பு மையம் விரைவில் செயல்பட உள்ளது. அதற்காக குடியிருப்புகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பையை சேகரிக்க இந்த புதிய வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. நுண் உரம் தயாரித்து அவற்றை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளோம். வீடுகளில் உள்ள செடிகளுக்கு தேவைப்பட்டால் குடியிருப்புவாசிகளுக்கும் உரமாக கொடுக்க உள்ளோம் என்றார்.