தேவநதி ஆற்றை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

தேவநதி ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2019-04-30 22:30 GMT
கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் பாண்டவையாறு, கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு, தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறந்து விடப்பட்டு 100-க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால்கள் மூலம் கீழ்வேளூர், அகரகடம்பனூர், ஆழியூர், நாகை, சிக்கல், பெருங்கடம்பனூர் உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் இருந்து அகரகடம்பனூர் ஊராட்சி வழியாக கடைமடை பகுதிக்கு செல்லும் தேவநதி ஆறு, தூர்வாரப்படாமல் உள்ளது.

நடவடிக்கை

மேலும் மேற்கண்ட பகுதி மக்கள் குளிக்க, கால்நடைகளை குளிப்பாட்ட உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு இந்த ஆற்றின் தண்ணீரை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஆற்றின் பல்வேறு இடங்களில் காட்டாமணக்கு உள்ளிட்ட தேவையற்ற செடிகள் வளர்ந்து புதர் மண்டிக்காணப்படுகிறது. ஆதலால் தண்ணீர் வரும் காலங்களில் விவசாயத்திற்கு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவநதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள காட்டாமணி உள்ளிட்ட தேவையற்ற செடிகளை அகற்றி, தேவநதி ஆற்றை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்