வாடிப்பட்டியில் வேன் டிரைவர் குத்தி கொலை

வாடிப்பட்டியில் வேன் டிரைவர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-04-29 22:41 GMT

வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் கிரி (வயது 24). மினி வேன் டிரைவர். இவருக்கும், நீரேத்தானை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் மணிபாரதிக்கும் (19) இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு வாடிப்பட்டி தபால்அலுவலகம் அருகில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மணிபாரதி, தான் வைத்திருந்த கத்தியால் கிரியை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து மணி பாரதியை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்