பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு விவசாயிகள் மனு

பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு விவசாயிகள் மனுகொடுத்தனர்.

Update: 2019-04-29 23:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை இல்லாததால் விவசாயம் அடியோடு பொய்த்து போனது. மாவட்டம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை ஏராளமானோருக்கு கிடைக்காததால் அவர்கள் கடும் வறுமையில் வாடி வருகின்றனர்.

இதனால் ஒவ்வொரு நாளும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்து வந்து பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் வழங்குமாறு மனு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாதவனூர் ஊராட்சியை சேர்ந்த அலமனேந்தல், வட்டகுடி, நரியகுடி, பூத்தோண்டி, சிங்கனேந்தல், புறக்குடி, முத்துவார்கொண்டான், நொச்சித்தோப்பு மற்றும் பெருவயல் ஊராட்சியை சேர்ந்த கழனிக்குடி, தேவிபட்டினம், சக்கரவாளநல்லூர், கலையனூர், பெருவயல், விளங்குளம், தெற்கு பெருவயல் மற்றும் சிறுவயல், கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திரளாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயிர் இழப்பீட்டு தொகையை வழங்கக்கோரி மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்