பெண்ணாடத்தில், மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெண்ணாடத்தில் மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-04-29 22:45 GMT
பெண்ணாடம்,

பெண்ணாடம் மேற்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 59). இவர் தனது வீட்டின் அருகே மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு தூங்க சென்றார். நேற்று காலை அவருடைய மனைவி வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அது குறித்து சுப்பிரமணியனிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து சுப்பிரமணியன் கடைக்கு சென்று பார்த்தார். அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை காணவில்லை.

அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுப்பிரமணியன் கடையை பூட்டிவிட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் மளிகை பொருட்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்