இந்திய பொதுத்துறை விமான நிறுவனமான ஏர்இந்தியாவில் டிரெயினி பிளைட் டிஸ்பேட்ஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 70 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நேரடி நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சீனியர் டிரெயினி பிளைட் டிஸ்பேட்ஜர் பணிக்கு 63 வயதுக்கு உட்பட்டவர்களும், ஜூனியர் டிரெயினி பிளைட் டிஸ்பேட்ஜர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ்-2 மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இயற்பியல், கணிதம் அடங்கிய பாடப்பிரிவில் இவர்கள் படித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.1000 கட்டணத்தை டி.டி. எடுத்து, குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி எடுத்துச் செல்ல வேண்டும். தேவையான சான்றுகள் அசல் மற்றும் நகல்களை உடன் எடுத்துச் செல்வது அவசியம். மே மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் நேர்காணல் நடக்கிறது. 6-ந் தேதி புது டெல்லியிலும், 9-ந்தேதி மும்பையிலும் நேர்காணல் நடக்கிறது.
இதுபற்றிய விரிவான விவரங்களை http://www.airindia.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விருப்பமுள்ளவர்கள் நேர்காணலுக்கு செல்லலாம்.