திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் அறுபத்துமூவர் வீதி உலா
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.;
ஸ்ரீரங்கம்,
பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தின் 50-வது ஆண்டு விழா, திருமுறை விழா, அறுபத்துமூவர் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. விழாவை திருவானைக்காவல் உதவி ஆணையர் ஜெயப்பிரியா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் காலை ஆன்மார்ந்த சிவபூஜை, சொற்பொழிவரங்கம், மாகேஸ்வர பூஜை, திருமுறை பண்ணிசை, அறுபத்துமூவர் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு ஆகியவை நடைபெற்றன. மூன்றாம் நாளான நேற்று காலை அறுபத்து மூவர் திருநீற்றான் மதில் வலம் வந்தனர். பின்னர் திருமுறைகள் பாராயணம் மற்றும் கூட்டு வழிபாடு நடைபெற்றது. மாலையில் அறுபத்துமூன்று நாயன்மார்களுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அறுபத்துமூவர் நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்களையும் வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தினர் செய்திருந்தனர்.