வீரசைவ மடத்தில் அர்ஜூன்சம்பத் பிறந்தநாளை கொண்டாட அனுமதி மறுப்பு கும்பகோணத்தில் பரபரப்பு
கும்பகோணத்தில் உள்ள வீரசைவ மடத்தில் அர்ஜூன்சம்பத்தின் பிறந்த நாளை கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத்தின் பிறந்த நாள் விழா கும்பகோணத்தில் உள்ள வீர சைவமடத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க இந்து மக்கள் கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் பிறந்த நாள் விழாவை வீரசைவ மடத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம் இருப்போம் என அறிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அர்ஜூன் சம்பத்தின் பிறந்த நாள் விழாவை வீரசைவ மடத்தில் கொண்டாட அனுமதி மறுத்தனர். மேலும் மடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:- வீர சைவமடத்தை நிர்வகிப்பதில் இரு தரப்பினருக்கு இடையே வழக்கு நடந்து வருகிறது. இதனால் வீர சைவ மடம் தற்போது சர்ச்சையில் உள்ளது. இந்த நிலையில் அங்கு பிறந்தநாள் விழா நடத்தினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு விழாவை நடத்த அனுமதி மறுத்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.