இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்தியாவிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-04-28 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள் அனுமதி ரத்து தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள், விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தி தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்களும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. விமான நிலைய பாதுகாப்பு படை, விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படை ஆகியோர் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் பயணிகள் முன்கூட்டியே வந்து பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ரசாயன பொருட்களை விமான நிலையம் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். மறுஉத்தரவு வரும்வரை பலத்த பாதுகாப்பு அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்