தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூரில் தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நகர கட்சி அலுவலகத்தில் நடந்தது.

Update: 2019-04-28 22:15 GMT
திருவாரூர்,

திருவாரூரில் தி.மு.க. மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நகர கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார்். முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன், மாவட்ட துணைச்செயலாளர்கள் கார்த்திக், ராமகிருஷ்ணன், கலைவாணி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர்் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரசாரம் செய்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்வது.

திருப்பரங்குன்றம் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கு பாடுபடுவது. நாடாளுமன்றம் மற்றும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்திரன், கலியபெருமாள், நகர செயலாளர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட துணைச்செயலாளர் ரஜினிசின்னா, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் தாஜூதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்