வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்,
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அடுத்த மாதம் (மே) 23-ந்தேதி நடக்கிறது. இதில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி ஆகிய 2 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள், ஆவணங்களும் இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையம், கல்லூரி வளாகம், நுழைவு வாயில் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் அனைத்தும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் வாக்கு எண்ணும் மையம், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் ஆகியவற்றை போலீசார் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். அத்துடன் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை அவ்வப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை, வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றில் அத்துமீறி யாரேனும் நுழைய முயற்சிக்கிறார்களா? என்று ஆய்வு செய்தார். மேலும் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய சோதனைக்கு பின்னர் தான் அனுமதிக்கப்படுகிறார்களா? என்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.